கோப்புப்படம் 
தமிழ்நாடு

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி

திருச்சி பால்பண்ணை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

DIN

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சந்திரன், பேருந்தில் பயணம் செய்த பழனியம்மாள் ஆகியோர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், படுகாயம் அடைந்த 12 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT