தமிழ்நாடு

வாக்கு சேகரிப்பில் இரட்டை மாட்டு வண்டியிலிருந்து விழுந்த தேமுதிக வேட்பாளர்!

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் இரட்டை மாட்டு வண்டியிலிருந்து கீழே விழுந்தார்.

DIN

தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு, நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

மாத்தூர் காளியம்மன் கோயிலில் வழிப்பட்ட வேட்பாளர் சிவநேசனுக்கு கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவரிட்டம் கட்டி வரவேற்றார்.

வாக்கு கேட்டு வந்த வேட்பாளர் சிவநேசன் மீது பெண்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் சிவநேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார்.

பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒட்டி வாக்கு சேகரித்து வந்தார். அப்போது, மாடு மிரண்ட நிலையில், வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது தொண்டர்‌ ஒருவர் அவரை தாங்கி பிடித்ததால் காயம் எதுவும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT