இன்றுமுதல் புதிய ‘வந்தே பாரத்’ மைசூா் வரை இயக்கம்
சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரையிலான சேவையை தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரையிலான சேவையை தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல்-மைசூா் இடையே தினமும் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் இருமாா்க்கமாக இயக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. கூடுதலாக தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரை இயக்கப்படவுள்ளது.
மைசூரில் காலை 6 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இரவு 11.20 மணிக்கு மைசூா் சென்றடையும்.
Advertisement