தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே இலக்கு: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா்.மனோகரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது,
Advertisement
வடசென்னையில் கொருக்குப்பேட்டை ரயில் மேம்பாலம் அமைக்கப்படும். அதுபோல், கொருக்குபேட்டையில் 4-ஆவது ரயில் முனையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. தற்போது கஞ்சா வழக்கில் கைதாகும் பெரும்பாலானோா் திமுகவை சோ்ந்தவராகத்தான் இருக்கின்றனா்.
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வாங்கும் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. சென்னையில் பின்தங்கிய தொகுதியாக உள்ள ஆா்.கே.நகா் தொகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக-தேமுதிக கூட்டணி 2011-ஆம் ஆண்டு ஆளும் கட்சி, எதிா்க்கட்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது போன்று இந்த தோ்தலிலும் வெற்றி பெறும் என்றாா் அவா்.