முகப்பு
தமிழ்நாடு

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்!

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்...

Updated On : 6 ஏப்ரல் 2026, 1:25 pm IST
பிரேமலதா விஜயகாந்த் - x / Premallatha Vijayakant
பகிர்:

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(ஏப். 6) முக்கிய தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரேமலதா கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இதே விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் பல்லாவரம் - அனகை டி.முருகேசன், திருத்தணி- டி.கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன், தருமபுரி- வி.இளங்கோவன், குடியாத்தம்(தனி) - கே.பி.பிரதாப், சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ், போளூர் - சரவணன், மயிலம்-வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Premallatha Vijayakant Files Nomination in Virudhachalam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.