கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து!

DIN

சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. .

இந்நிலையில், இதனை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் அமலாக்கத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என்றும், எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT