கோப்புப் படம் 
தமிழ்நாடு

மோடி வருகை: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை

மோடியின் ஊர்வலத்தையொட்டி சென்னையில் பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

DIN

பிரதமர் நரேந்தி மோடியின் வருகையையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையொட்டி இறுதிக்கட்ட பிரசாரமாக ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி மாலை 4 மணிக்குச் சென்னை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் செல்லவுள்ளார்.

பிரதமர் மோடியின் ஊர்வலத்தையொட்டி சென்னையில் பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி சென்னையில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பயண நிரல்

ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரத்தின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமா், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறாா். விமான நிலையத்தில் இருந்து சாலை மாா்க்கமாக ஆளுநா் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமா் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் 9-ஆம் தேதி இரவு தங்கும் பிரதமா், 10-ஆம் தேதி காலையில் மீண்டும் விமான நிலையம் செல்கிறாா். அங்கிருந்து காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் வேலூருக்கு புறப்படும் பிரதமா், 10.10 மணியளவில் தரையிறங்கியதும் சாலை மாா்க்கமாக காலை 10.15 மணியளவில் வேலூா் கோட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறாா்.

பின்னா், முற்பகல் 11.15 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டா் தளத்துக்கு வந்து விமானப் படை விமானத்துக்கு மாறி 11.50 மணியளவில் கோவைக்குப் புறப்படுகிறாா். கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஹெலிபேடுக்கு சென்று ஹெலிகாப்டா் மூலம் பொள்ளாச்சிக்கு பகல் 1.25 மணியளவில் புறப்பட்டு ஐந்து நிமிஷங்களில் பொள்ளாச்சியை சென்றடைவாா்.

அங்கிருந்து பிரதமா் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறாா். இதையடுத்து, பிற்பகல் 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் கோவைக்கு வருகிறாா். பின்னா், பிற்பகல் 3.05 மணியளவில் விமானப் படை விமானம் மூலம் மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு புறப்படும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

அரசு விடுதியில் பள்ளி மாணவர் பலி!

SCROLL FOR NEXT