தமிழ்நாடு

கள்ளழகர் திருவிழா: பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில், ஏப்ரல் 19- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் பட்டாபிஷேகமும், மறுநாள் 20- ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி திருக்கல்யாணமும், 22- ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வுகளான கள்ளழகா் எதிா்சேவை ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப். 23-ல் நடக்கவிருந்த பள்ளித் தேர்வு ஏப். 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT