கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் -பட்டியல்.pdf
Preview

அதன்படி, ஏப். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் உள்பட 7,154 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பிற ஊர்களில் இருந்து ஏப். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 3600 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT