தமிழ்நாடு

மோடிக்கு இந்தியா பட்டா போட்டு கொடுக்கப்பட்டதா? சீமான்

சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.மனோஜ்குமாரை ஆதரித்து சீமான் பிரசாரம்.

DIN

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியா பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.மனோஜ்குமாரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

இந்தியக் கண்டமே நாம் தமிழர் கட்சியை திரும்பிப் பார்க்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது காங்கிரஸ் கட்சி

நீட் தேர்வு விலக்குக்கு தன்னிடம் ரகசியம் உள்ளதாகக் கூறிய உதயநிதி இதுவரை அதனைக் கூறாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் நதிநீர் என்ற தேசிய உரிமையை காங்கிரஸ், பாஜக இரண்டும் பறிக்கின்றன.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை செய்யுமாறு கெஞ்சிவிட்டு வருகிறார். அவர் புரோக்கர். ஜிஎஸ்டி ஒரு அடாவடி பொருளாதாரம்.

உழைப்பு, முதலீடு என்னுடையது, ஆனால் அதற்கு வரியை மட்டும் கேட்பது அபத்தம். மக்களிடம் பிடித்தம் செய்யப்படும் வரி, எந்தவொரு திட்டத்திலும் திரும்பக் கொடுப்பதில்லை.

வீடு கட்ட நினைத்தால் கம்பி, மணல், செங்கல் என அனைத்துக்கும் வரி கட்டுகிறோம். ஆனால் கடைசி வரை வீடு கட்டி முடிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT