தமிழ்நாடு

நாமக்கல்லில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகனப் பேரணி

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வாகனப் பேரணி நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூர், பரமத்தி ஒன்றியங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காலை 12..30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல்லுக்கு வந்தார். நாமக்கல் - பரமத்தி சாலையில், தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திலிருந்து கார் மூலம் வாகனப் பேரணி நடைபெறும் இடத்திற்கு மதியம் 12. 45 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் சந்திப்பில் இருந்து, பேருந்து நிலையம் வரையில் சாலையின் இருபுறமும் திரண்டிருக்கும் மக்களை பார்த்து கை அசைத்தபடி அவர் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்திற்கு வாக்கு சேகரித்தார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT