தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் ஏப். 11-ல் ரமலான் பண்டிகை!

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இன்று பிறை தெரியாத நிலையில் நாளை மறுநாள் (ஏப்.11) ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 11 ம் தேதிமுதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்திருந்தார்.

ஒரு மாதம் நோன்பு காலம் இருந்த நிலையில், ரமலான் மாதம் முடிந்து அடுத்த மாதம் சவ்வால் பிறப்பதற்கான பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் தென்படவில்லை.

ஆகையால் ஏப்ரல் 11 அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் வரும் 11ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT