மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன்(வயது 97) வயது மூப்பு காரணமாக இன்று (ஏப். 9, செவ்வாய்க்கிழமை) காலமானார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆர்.எம். வீரப்பன்.
சென்னையில் வசித்து வந்த ஆர்.எம். வீரப்பன், மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மருத்துவர்களின் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன்.
திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவை உருவாக்க ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆருக்கு உதவினார்.
மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் ஆர்.எம். வீரப்பன்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.