தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

DIN

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி 3 நாள்கள் நடைபெறும் அறுபத்து மூவர் விழா இன்று(ஏப். 16) தொடங்கியது.

வெள்ளி அதிகார நந்தி கிரி பிரதக்ஷணம் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ விழா ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்டில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரர் தாழக் கோயில் அமைந்துள்ளது. வேதமலை,பட்சி தீர்த்தம், சங்கு பிறக்கும் சங்கு தீர்த்த குளம், கழுகுன்றம் என பல்வேறு சிறப்புகள் கொண்டு கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 14 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 24 ந்தேதி வரை நடைபெறுகிறது.

இவ்விழாவின் 3 ஆம் நாள் உற்சவமாக, சாமி மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகள், பக்தவத்சலேஸ்வரர் தாளக் கோயிலில் இருந்து புறப்பட்டு வேதகிரீஸ்வரர் மலைகிரி பிரதக்ஷண ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி சாமிகளுக்கும், 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

சாமிகள் மற்றும் நாயன்மார்கள் சிறப்பு அலங்காரத்தில் வேதகிரீஸ்வரர் மலை கோயில் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு திருக்கழுகுன்றம் கிரிவலம் ஊர்வலம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், கல்பாக்கம், செங்கல்பட்டு என பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

வழிநெடுகிலும் ஆன்மீக பக்தர்கள் அன்னதானங்கள் குளிர்பானங்கள், தண்ணீர் என வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி தாசன் , செயல் அலுவலர் புவியரசு , தக்கார் மற்றும் செயல் அலுவலர் கு.குமரவேல் , மேலாளர் விஜியன், கோயில் பணியாளர்கள் சிவாச்சாரியார்கள், உற்சவ உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT