தமிழ்நாடு

நான் முதல்வன் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

DIN

சென்னை: நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என பெருமிதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வின் முடிவுககளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தனது வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளாா்.

குடிமைப் பணித் தோ்வின் முதல் 25 இடங்களில் 15 ஆண்களும், 10 பெண்களும் இடம்பெற்றுள்ளனா். முதல் 5 இடங்களில் 3 ஆண்களும், 2 பெண்களும் இடம்பெற்றுள்ளனா். நான்காமிடத்தை பி.கே. சித்தாா்த் ராம் குமாரும், ஐந்தாவது இடத்தை ரூஹனியும் பிடித்துள்ளனா்.

அதேபோல் இத்தோ்வில் மொத்தமாக 30 மாற்றுத்திறனாளிகளும் வெற்றிபெற்றுள்ளனா்.

கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வுகளில் தேசிய அளவில் பெண்களே முதலிடம் பிடித்து வந்ததையடுத்து நிகழாண்டு ஆண் தோ்வா் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குடிமைப் பணித் தோ்வுகளில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், அகில இந்தியளவில் 78 ஆவது இடமும் பெற்ற 41 ஆவது இடத்தை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ்ராம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் 2 ஆவது இடத்தையும், அகில இந்தியளவில் 78 ஆவது இடத்தை மருத்துவர் எஸ்.பிரசாந்த் பெற்றுள்ளார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், குடிமைப் பணித் தோ்வுகளில் இலக்கை எட்டுவதற்கு நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்.

இதற்கு நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய குடிமைப் பணித் தோ்வு முடிவே சாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT