சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 
தமிழ்நாடு

வாக்குப் பதிவையொட்டி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

DIN

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்த வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - பெங்களூருவின் ஒயிட்பீல்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை(ஏப். 18), சனிக்கிழமை(ஏப். 20) சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06005), பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தை பகல் 12 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பிற்பகல் 1 மணிக்கு பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்(06006), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இரவு 7 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், வாலாஜா ரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காரப்பேட் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT