தமிழ்நாடு

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

DIN

பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு மேலும் அளித்த பேட்டியில், வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் இடம்பெறவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

ஒரு வீட்டில் இறந்த கணவனின் பெயர் பட்டியலில் உள்ளது. ஆனால் மனைவி பெயர் இல்லை. நிறைய வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குப்பதிவு நடத்தி எந்த பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் இல்லாத நிறைய பேர் வாக்குவாதம் செய்வதால் வாக்குப்பதிவு தாமதம்.

கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கோவையில் தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை. வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வந்தோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT