FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது பற்றி...

Updated On : 23 பிப்ரவரி 2026, 3:11 pm IST
தேர்தல் ஆணையம்
பகிர்:

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்பது?

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

1. அடையாள அட்டை எண் மூலம் தேடுதல்

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் மற்றும் மாநிலத்தை பதிவிட்டு பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.

2. தகவல்கள் மூலம் தேடுதல்

புதிய வாக்காளராக இருந்தால் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்களை பதிவிட்டு பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்கலாம்.

மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் ஆகியவற்றை சரியாக பதிவு செய்தால், உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியும்.

3. தொலைப்பேசி எண் மூலம் தேடுதல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களின் தொலைப்பேசி எண்ணை பதிவிட்டு, அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் கீழே தகவல்கள் கிடைக்கும். உங்கள் விவரங்களை விரிவாக பார்ப்பதற்கு ’வியூ டீடைல்ஸ்’ (view details) என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.

summary

Is your name in the final voter list? How to know?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments