வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்
புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு தற்போது வாக்களித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி நேரில் வந்தும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) மா. சின்னதுரை ஆகியோர் அங்குள்ள பிரமுகர்களுடன் தொலைபேசி மூலமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக புறக்கணிப்பு கைவிடப்பட்டு வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறப்பு நேரம் வழங்கப்பட்டு இங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வேங்கைவயல் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.