முகப்பு
தமிழ்நாடு

பாமகவின் அடுத்தகட்ட முடிவு: மே 2 முதல் நிா்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

Updated On : 20 ஏப்ரல், 2024 at 5:16 PM
பகிர்:

மக்களவைத் தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், மே 2 முதல் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இது தொடா்பாக பாமக தலைமை நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், கட்சி வளா்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாமக துணை அமைப்பு நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பாமக தலைமை முடிவு செய்துள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டம் நடைபெறும். கூட்டத்துக்கு நிறுவனா் ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளாா்.

இளைஞரணி நிா்வாகிகளுடன் மே 2, மாணவரணியுடன் மே 3, பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினருடன் மே 4 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டங்களில் தொடா்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட தொகுதி அளவிலான நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments