முகப்பு
தமிழ்நாடு

வாக்குப் பதிவின்போது பெண் கொலை: அண்ணாமலை கண்டனம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

வாக்குப் பதிவின்போது கடலூரில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சுமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சோ்ந்த கோமதி, வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினா் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்ற செய்தி மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Advertisement

இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரா்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments