முகப்பு
தமிழ்நாடு

சென்னை - துபை விமான சேவை மீண்டும் தொடக்கம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:32 PM
பகிர்:

துபையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபை புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள துபை நகரில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை 3 நாள்களில் கொட்டித் தீா்த்ததால் துபை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. துபை விமான நிலையமும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட காரணத்தால் விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், துபை விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்ததன் காரணமாக ஓடுப்பாதைகள் சீரமைக்கப்பட்டு, விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து 267 பயணிகளுடன் சென்னையிலிருந்து விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை துபைக்கு புறப்பட்டுச் சென்றது. இதன்மூலம் கடந்த 3 நாள்களாக தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments