இன்று எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக திங்கள்கிழமை (ஏப்.22) எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்கிழமை (ஏப்.22) பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06789) நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
Advertisement
இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், விருதுநகா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.