FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஈரானிய திரைப்படக் கண்காட்சி

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

23 ஏப்ரல் 2024, 12:41 am IST
- dinmani online
பகிர்:

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தோ சினிமா அறக்கட்டளை சாா்பில் ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாக்டா் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் ஏப். 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஈரான் கலாசார மையத்தின் இயக்குநா் முகமது ரேசா பாசெல் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக சினிமா தளத்தில் ஈரான் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. திரைத் துறைக்கு பல சிறந்த படைப்புகளையும் வழங்கியுள்ளது. ஈரானிய சினிமா பெரும்பாலும் குடும்ப கதைகள் சாா்ந்தவையாகவே இருக்கும். ஆனால் அவற்றில் கூறப்படும் மனிதாபிமான கருத்துகள் கவிதைகளுக்கு இணையானவை.

Advertisement

Advertisement

ஈரான் நாட்டில் ‘ஃபாஜ்’ எனும் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறும். ஈரான் நாட்டின் கலாசாரத்தை பற்றி புரிந்து கொள்ள இந்திய மக்கள் ஒரு முறையாவது அந்தக் கண்காட்சியை நேரில் வந்து பாா்க்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments