கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்
சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம்: திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் போற்றப்படுகிறது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்.
இக்கோயிலில் தை முதல் நாளில் தைத் தேரோட்டமும், சித்திரை பெளர்ணமியில் சித்திரை பெரியத் தேரோட்டமும் நடத்தப்படும். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தேராக சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேர் திகழ்கிறது.
கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் உற்சவங்கள் நடைபெற்று வந்தன.
Advertisement
Advertisement
இந்தத் தேரோட்டத்துக்கான அலங்காரப் பணி மார்ச் 25 ஆம் தேதி தொடங்கியது. இந்தச் சித்திரைப் பெரிய தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்னர் 450 டன்னை எட்டியுள்ளது.
தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்று விட்டம் 28 அடியும் உடையது. தேர் அலங்காரத்துக்கு பின் ஒட்டுமொத்த உயரம் 110 அடியை எட்டிய இத்தேர் ஆடி அசைந்து வருவது தனி அழகுதான்.
இத்தேரில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.