Center-Center-Chennai
Center-Center-Chennai
தமிழ்நாடு

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

DIN

இன்று முதல் ஏப்ரல் 28 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று(ஏப்.24)லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 9 இடங்களில் 40-42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸாகவும், ஈரோட்டில் 42.0, திருப்பத்தூரில் 41.6, கரூர், பரமத்தி வேலூரில் 41.5, தர்மபுரி, மதுரையில் 41.0, நாமக்கல்லில் 40.5, திருச்சியில் 40.1 ஆகவும் பதிவகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT