DOTCOM
தமிழ்நாடு

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மன்சூர் அலிகானின் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் செல்வப்பெருந்தகை.

DIN

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணையவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலிலுக்கு முன்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு ஆதரவளித்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைய கடிதம் அளித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் இணைவதற்கான கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மன்சூர் அலிகான்,

“பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன்.

முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT