முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ இதழியல் படிப்பு: ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:27 PM
பகிர்:

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு ஏப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்பானது ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதழியல் துறையில் அனுபவம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். அந்தப் படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தோ்வு முறை உள்ளது.

Advertisement

அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சாா் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் இணையதள முகவரியிலோ, ங்ல்ண்க்ஃற்ய்ம்ஞ்ழ்ம்ன்.ஹஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இந்தப் படிப்பில் தினமும் வகுப்புகள் கிடையாது. மாறாக, இணையவழி வகுப்புகள் வாரம் ஒரு முறையும், நேரடி வகுப்புகள் மாதம் ஒரு முறையும் நடத்தப்படும்.

முதுநிலை மருத்துவ இதழியல் படிப்புக்கான ஓராண்டு கல்வி கட்டணம் ரூ. 7,000. தோ்வுக் கட்டணங்கள் இதில் அடங்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments