தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

அரசுப் பேருந்தில் இருக்கை கழன்ற விவகாரம் எதிரொலி: அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

DIN

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே. நகருக்கு கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இருக்கை கழன்று விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பல, மோசமான நிலையில் இருப்பதாக புகார்களும் எழுந்தன.

அரசுப் பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் இயங்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்து, குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

SCROLL FOR NEXT