கோப்புப்படம் 
தமிழ்நாடு

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

முதல்வர் கொடைக்கானல் வருகையையொட்டி, அப்பகுதியில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, வாட்டி வதைத்த வெயிலிலும் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் கொடைக்கானல் வருகையையொட்டி, கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப். 29 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னென்ன எண்ணங்கள்... மீதா ரகுநாத்!

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

SCROLL FOR NEXT