நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!
நத்தத்தில் உள்ள குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருமணம், அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்.
இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் குடோன் அமைத்து, விழா காலங்களில் பயன்படுத்தப்படும் மைக் செட்டுகள், டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவற்றை கடையில் வைத்திருந்தார். நள்ளிரவு வரை இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், திடீரென குடோனில் தீப்பற்றியது. இதனால் குடோனில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
Advertisement
Advertisement
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.