கோப்புப்படம் 
தமிழ்நாடு

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பள்ளி, விமான நிலையங்களைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு, மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அப்போது

குறிப்பாக இன்று நாடு முழுவதுமிருக்கும் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மின்னஞ்சலில், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று போபால், கோவா, நாக்பூர், கொல்கத், ஜெய்பூர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள நேரு மருத்துவமனைக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

உடனடியாக விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனை முழுவதையும் சோதனை செய்து மிரட்டல் வெறும் புரளி என்று உறுதிப்படுத்தினர்.

இதுபோல, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குற்றவியல் காவல்துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை இணைந்து மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு சில மாதங்களாக, பள்ளிகள், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் என தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இதனை அனுப்பியவர்கள் யார், எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்ற தகவல்களை அறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT