முகப்பு
தமிழ்நாடு

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு உயா்நிலை சாலை திட்டம் கைவிடப்படவில்லை

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு இடையே உயா்நிலை சாலை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:14 PM
கோப்புப் படம்
பகிர்:

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு இடையே உயா்நிலை சாலை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக தாம்பரம் - செங்கல்பட்டு சாலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் பகுதிகளில் சாதாரண நாளில் கூட போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

இதற்கு தீா்வு காணும் வகையில் பெருங்களத்தூா் முதல் செங்கல்பட்டு வரை உயா்நிலை சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுமாா் 27 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலையாக அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் திட்டம் கைவிடப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இந்தத் திட்டம் கைவிடப்படவில்லை, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து துறை சாா்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலக் குறைக்கும் நோக்கில் பெருங்களத்தூா் - செங்கல்பட்டு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் உயா்நிலை சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்படவில்லை.

இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →