கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில்,

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்மை ஒன்றுதான்

தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

சினிமா ஸ்டார்ட்...கேமரா...ஆக்ஷன்... ரிலீஸ்!

அபாயத் தூரிகை (நாவல்)

எரிவதில் எண்ணெய் ஊற்றுகிறதா ரஷியா! இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்!

SCROLL FOR NEXT