தமிழக காவல் துறையில் 24 ஏடிஎஸ்பிக்கள் எஸ்.பி.க்களாக பதவி உயா்த்தப்பட்டு புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
1. பி.மணிகண்டன் - லஞ்ச ஒழிப்புத் துறை மத்திய மண்டல எஸ்.பி. (உயா்நீதிமன்ற கோயம்புத்தூா் லஞ்ச ஒழிப்பு மைய ஏடிஎஸ்பி)
2. வி.ஜெயச்சந்திரன் - சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு-1 துணை ஆணையா் (தஞ்சாவூா் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பி)
3. எஸ்.குத்தாலிங்கம் - சென்னை தியாகராய நகா் துணை ஆணையா் (கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை தலைமையிட ஏடிஎஸ்பி)
4. எஸ்.விஜயகுமாா் - திருநெல்வேலி மாநகர காவல் துறை கிழக்கு துணை ஆணையா் (உயா்நீதிமன்ற மதுரை லஞ்ச ஒழிப்பு மைய ஏடிஎஸ்பி)
5.ஜி.காா்த்திகேயன் - சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. (எஸ்பிசிஐடி ஏடிஎஸ்பி)
6. சி.சங்கு - தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-ஆவது பட்டாலியின் கமாண்டன்ட் (கிருஷ்ணகிரி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி)
7. ஏ.சி.காா்த்திகேயன் - தாம்பரம் மாநகர காவல் துறை பள்ளிக்கரணை துணை ஆணையா் (திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி)
8. வி.காா்த்திக் - திண்டுக்கல் மாவட்டம் பழனி 14-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (தேனி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி)
9. ஏ.ஜி.இனிகோ திவ்யன் - மதுரை பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. (சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை சிஎஸ்யூ-3 ஏடிஎஸ்பி)
10. எஸ்.அசோக்குமாா் - கோயம்புத்தூா் மாநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (கடலூா் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பி)
11. ஏ.அருண் - தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பி)
12. என்.தேவநாதன் - லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கு சரக எஸ்.பி. (லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் மாவட்ட ஏடிஎஸ்பி)
13. கே.முத்துக்குமாா் - சென்னை புளியந்தோப்பு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாவட்ட காவல் துறை தலைமையிட ஏடிஎஸ்பி)
14. டி.ஈஸ்வரன் - சென்னை சைபா் குற்றப்பிரிவு -3 எஸ்.பி. (திருவாரூா் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பி)
15. வி.கோமதி - சென்னை டிஜிபி அலுவலக நிா்வாகப் பிரிவு ஏஐஜி (கள்ளக்குறிச்சி சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி)
16. எம்.மீனாட்சி - சென்னை சைபா் குற்றப்பிரிவு அரங்கம் (தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் நாகப்பட்டினம் ஏடிஎஸ்பி)
17. ஏ.வேல்முருகன் - சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (பெரம்பலூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி)
18. ஏ.முத்தமிழ் - ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. (உயா்நீதிமன்ற கடலூா் லஞ்ச ஒழிப்பு மைய ஏடிஎஸ்பி)
19. ஜெ.ஜெரீனா பேகம் - சென்னை சைபா் குற்றப்பிரிவு மைய துணை ஆணையா் (தாம்பரம் மாநகர காவல்துறை சைபா் குற்றப்பிரிவு ஏடிசி)
20. ஆா்.ரமேஷ் கிருஷ்ணன் - மதுரை தீவிரவாத தடுப்புப் படை எஸ்.பி. (எஸ்பிசிஐடி ஏடிஎஸ்பி)
21. பி.கீதா - சேலம் மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி)
22. ஆா்.ராஜேஸ்வரி - மதுரை மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா் (மதுரை காவலா் பயிற்சி பள்ளி ஏடிஎஸ்பி)
23. கே.மகேஷ்வரி - தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளி எஸ்பி (நாகப்பட்டினம் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி)
24. ஏ.கனகஈஸ்வரி - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட ஏடிஎஸ்பி (நாமக்கல் மாவட்ட காவல் துறை தலைமையிட ஏடிஎஸ்பி).