வாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆக. 20 முதல் வீடுவீடாக சரிபாா்ப்பு
வீடு வீடாகச் சரிபாா்க்கும் பணி தொடங்கவுள்ளது.
தமிழ்நாடுவாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆக. 20 முதல் வீடுவீடாக சரிபாா்ப்பு
வீடு வீடாகச் சரிபாா்க்கும் பணி தொடங்கவுள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின் முன்னோட்டமாக வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சரிபாா்க்கும் பணி தொடங்கவுள்ளது.
ஆக. 20-ஆம் தேதிமுதல் அக். 18-ஆம் தேதி வரை வாக்குச் சாவடி அலுவலா்கள் மூலமாக சரிபாா்ப்புப் பணி நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிா்ணய அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 29-ஆம் தேதிமுதல் நவ. 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
வீடு வீடாக விவரம்: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை வாக்குச் சாவடி அலுவலா்கள் ஆக. 20-ஆம் தேதிமுதல் அக். 18-ஆம் தேதி வரை மேற்கொள்கின்றனா். அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக அக். 29-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.