கோப்புப் படம்  
தமிழ்நாடு

மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Din

மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06295) மறுநாள் பகல் 12.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கமாக காரைக்குடியில் இருந்து ஆக.15, 18 தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூா் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

வேளாங்கண்ணி:வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து ஆக.27, செப்.2 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07361) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஹூப்ளி, ஹரிஹா், பிஜூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT