வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மு. குமரேசன் (35), புவனேஸ்வரி(28) .
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை எதுவும் இல்லை.
இத்தம்பதி வீட்டின் மொட்டை மாடியில் அருகே செல்லும் உயரழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே சடலமாகக் கிடந்தது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.
கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.