நகராட்சி ஆணையராகப் பணி ஆணை பெற்ற துர்காவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளரின் மகளான துர்கா, நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கவிருப்பது இளைஞர்களை ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளது.
இந்த நிலையில், துர்கா அளித்துள்ள பேட்டியில், தனது தாத்தாவும், அப்பாவும் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றியவர்கள் என்றும், இந்த நிலையில், ஏழ்மையான சூழலில் வாழ்ந்தாலும், படிப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேறி இருப்பதாகவும் துர்கா பேட்டியில் தெரிவித்திருப்பது, இளைஞர்களை ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளது.
அவரைப் பாராட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ’நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் கல்விக்கு இருப்பதாகவும், இதற்கு ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி என்று தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் சிறப்பிடம் பெற்று நகராட்சி ஆணையராகப் பணி ஆணை பெற்றுள்ள துர்காவின் தந்தை கடந்த 7 மாதங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டாலும், அவரது கனவை துர்கா நிறைவேற்றியிருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.