கோப்புப்படம் 
தமிழ்நாடு

இன்றுமுதல் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.

Din

திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் வியாழக்கிழமை (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு - திருநெல்வேலி இடையே பாலருவி விரைவு ரயில் (எண்: 16791/16792) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை சுதந்திர தினத்தன்று (ஆக.15) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.

ரயில் நேரம்: பாலக்காட்டிலிருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் பாலருவி விரைவுரயில் அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நன்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், வழியாக பாலக்காடு செல்லும்.

தற்போது பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயங்கிவரும் பணிகள் ரயில் (எண்: 06667/06668) ஆக.18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ரயில் பாலக்காட்டிலிருந்து புனலூா் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு பயணிகளின் கோரிக்கையை ஏற்று செங்கோட்டை வரையும், அதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் வரையும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT