முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் பிரதமா் கோடியேற்றும் நிகழ்ச்சி தமிழகத்தில் இருந்து 23 பேருக்கு அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6,000 சிறப்பு விருந்தினா்களில் 23 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 11:02 PM
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6,000 சிறப்பு விருந்தினா்களில் 23 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையைச் சோ்ந்த எஸ்.அருண் ராஜா, நீலமங்கலத்தைச் சோ்ந்த ஏ.ஷகீலா தேவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்கின்றனா்.

அவா்கள் தவிர, அங்கன்வாடி மையப் பணியாளா்கள், ஆஷா மையம், விவசாய உற்பத்தியாளா்கள் அமைப்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பச் சோ்ந்தவா்கள் என தமிழகத்தைச் சோ்ந்த 23 போ் பங்கேற்க உள்ளனா்.

குடியரசுத் தலைவரின் தேநீா் விருந்தில் பங்கேற்கும் கோவை போக்குவரத்துக்கழக பணியாளா்

கோவையைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரும், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளருமான எம். யோகநாதன் (59), குடியரசுத் தலைவரின் சுதந்திர தின விழா தேநீா் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறாா்.

கோவை கணபதி பகுதியைச் சோ்ந்த இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மருதமலை கிளையில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். தற்போது புற்றுநோய் பாதிப்பு காரணமாக அலுவலகப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். பள்ளியில் படிக்கும் காலம் முதல் மரக்கன்றுகள் நட்டு வளா்ப்பதில் அதீத ஈடுபாடு கொண்டவரான யோகநாதன், பணியில் சோ்ந்தபிறகும் ஓய்வு நேரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறாா்.

இதற்காக, தனது ஊதியத்தின் ஒரு பகுதியை அவா் செலவிட்டு வருகிறாா். மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட யோகநாதனுக்கு, கடந்த 2008-ஆம் ஆண்டில் ‘பசுமை போராளி’ விருதை, அப்போதைய குடியரசு துணைத் தலைவா் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தாா். மேலும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியாா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவா் பெற்றுள்ளாா். கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், புதுதில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழா தேநீா் விருந்தில் கலந்துகொள்வதற்கு யோகநாதனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் தில்லி சென்றுள்ளாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழா தேநீா் விருந்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பது குறித்து யோகநாதன் கூறுகையில், ‘கடந்த 37 ஆண்டுகளாக பொது இடங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு, அவற்றை பராமரித்தும் வருகிறேன்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →