முதல்வா் மு.க.ஸ்டாலின் tndipr
தமிழ்நாடு

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வா் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினார்.

கோட்டைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, முப்படை அதிகாரிகளை தலைமை செயலா் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

காவல்துறையின் மரியாதையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, சுதந்திர தின உரையாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சுதந்திர தினவிழாவில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எல்எல்ஏ-க்கள், உயா் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழா மேடையில் தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு டாக்டா் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்டவை சற்றுநேரத்தில் முதல்வர் வழங்கவுள்ளார்.

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை கொத்தளப் பகுதி உள்பட தலைமைச் செயலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

ஆக.10-இல் மாநில செஸ் போட்டி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்

குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்

SCROLL FOR NEXT