12 மாவட்டங்களில் நள்ளிரவு வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்
தமிழ்நாடு12 மாவட்டங்களில் நள்ளிரவு வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கீழ்கண்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி
கரூர்
தருமபுரி
கிருஷ்ணகிரி
நாமக்கல்
சேலம்
அரியலூர்
பெரம்பலூர்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
திருவண்ணாமலை
தேனி
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
19.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.