பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் dotcom
தமிழ்நாடு

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.

DIN

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914-ல் கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் வரும்போது, திறந்து மூடும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.

2007-ல் இந்த மீட்டா்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் வலுவிழந்த நிலையில், ரயிலின் வேகம் குறைத்து இயக்கப்பட்டது. எனினும் இந்த பாலத்தில் ரயில் செல்வது பாதுகாப்பு அல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தனர்.

எனவே, ரூ. 550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இறுதிப் பணிகள் முடிவடைந்த நிலையில் 11 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை இயக்கி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவித்திருந்தது.

பாலத்தின் குறுக்கே கப்பல்கள் வரும்போது அதற்கு வழிவிடும் வகையில் திறந்து மூடக்கூடிய தூக்குப் பாலம் (லிப்டிங் கார்டா்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில் விரைவில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே செங்குத்தான நிலையில் திறந்து, மூடும் வசதி கொண்ட முதல் பாலம் என்ற பெருமையைப் பாம்பன் பாலம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT