FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தாம்பரத்திலிருந்து வேளாங்கண்ணி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து ஆக.28-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

25 ஆகஸ்ட் 2024, 12:08 am IST
கோப்புப்படம்
பகிர்:

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து ஆக.28-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று திருச்சிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து ஆக. 28-ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06119) மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 31-ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும்.

திருச்சி-தாம்பரம்: திருச்சியில் இருந்து ஆக. 28-ஆம் தேதி பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஆக.30-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 4.10 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments