முகப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 11:55 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், IND-TN-10-MM-34 என்ற பதிவெண் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் ஆக.26 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டிய முதல்வர், மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிப்பதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்வர்,

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்தியப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆக. 23 ஆம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →