கோப்புப்படம்.  
தமிழ்நாடு

நாளை 3 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்

பிரதமர் மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

DIN

பிரதமர் மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் 'மேக் இன் இந்தியா', தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் - லக்னௌ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.

மீரட் - லக்னௌ இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும்.

இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகமாகவும் வசதியுடனும் பயணிக்க உலகத்தரம் வாய்ந்த வழிகளை வழங்கும். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

SCROLL FOR NEXT