ஃபார்முலா-4 கார் பந்தயம்.(கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

சென்னையில் கார் பந்தயம் - நீடிக்கும் தாமதம்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் மாலை 6 மணிக்கு பிறகே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் மாலை 6 மணிக்கு பிறகே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பந்தய சாலையின் 10 மற்றும் 19வது வளைவுகளை மாற்றியமைக்க எப்.ஐ.ஏ இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வீரர்கள் விடுதிக்கு திரும்பினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும்இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

பந்தயத்தின் பயிற்சி சுற்று, சனிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச காா் பந்தயமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT