ஆவின் பால் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கனமழையிலும் பொதுமக்களுக்கு 100% பால் விநியோகம்: ஆவின்

கனமழையிலும் பொதுமக்களுக்கு 100% பால் விநியோகம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

DIN

கனமழையிலும் பொதுமக்களுக்கு 100% பால் விநியோகம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100% விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: வார இறுதி நாளில் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்

கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால்

எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

எங்கேயும் எப்போதும்... சான்வி மேக்னா!

தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்!

பள்ளி வாகனம் - கார் நேருக்குநேர் மோதி விபத்து! 5 குழந்தைகள் கவலைக்கிடம்!

அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானி: வாட்டர் மெலன் ஸ்டார்!

SCROLL FOR NEXT