சிக்கன் 65 - கோப்புப்படம் Center-Center-Hyderabad
தமிழ்நாடு

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65! உலகளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிக்கன் 65 உலகளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை

DIN

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65, இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.

ஆண்டுதோறும் உலகளவில் மக்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளை வகைப்பிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது டேஸ்ட் அட்லாஸ்.

இனிப்பு, அசைவம், பருப்புகளில் செய்யப்படும் உணவு என வகை வகையான பட்டியல்களை வெளியிட்டு படிப்பவர்களின் நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த பட்டியலில் தற்போதைய புதிய வெளியீடு கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியல்.

இதில்தான், தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 மூன்றாவது இடத்தில் இடம்பிடித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே உணவு என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் டேஸ்ட் அட்லாஸ், சிக்கன் 65- அதன் பிரத்யேக தயாரிப்பு மற்றும் சுவையை புகழ்ந்து தள்ளியிருக்கிறது. இஞ்சி - பூண்டு மசித்த கலவை, உப்பு, காரம், புளிப்பு, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, சோள மாவு என அனைத்தும் கலந்த மசாலாக்களில் நன்கு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொறித்து சிக்கன் 65 தயாரிக்கப்படுகிறது. இது 1960ஆம் ஆண்டு தமிழகத்தில் புஹாரி என்ற உணவகத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிக்கன் 65-ன் சிறப்பு அதனுடன் பல்வேறு ருசிகளில் சாஸ்களை தொட்டு சாப்பிடும்போது பல ருசிகளை அளிக்கும்.

இந்த பட்டியலில், சீனாவின் கிரிஸ்பி ஃபிரைடு சிக்கன், தைவானின் பாப்கான் சிக்கன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT